1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (12:12 IST)

மாஸ் காட்டும் பினராயி: குடியுரிமையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்!!

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது. 
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் ஆறு மாநில் முதல்வர்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று, சி.ஏ.ஏ.வை வாபஸ் பெறக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இத்தீர்மானத்துக்கு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது.
 
இதன் பின்னர்  பினராயி விஜயன் பின்வருமாறு பேசினார், மதச்சார்பின்மையை பன்னெடுங்காலமாக பாதுகாத்து வருகிறது கேரளா. கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலரும் இந்த நிலத்துக்கு வந்துள்ளனர். வரலாற்று தொடக்க காலங்களிலேயே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கேரளாவுக்கு வருகை தந்தவர்கள். இந்த மரபார்ந்த சூழ்நிலையை பாதுகாக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து #PinarayiVijayan என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.