கேரளா நிலச்சரிவு: ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கும் மோடி!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:46 IST)
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் என பிரதமர் மோடி அறிவிப்பு.
 
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அங்கு போக்குவரத்து தடைபட்டது.இந்த நிலையில், நேற்று இரவு வேளை பெட்டிமுறி என்ற இடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்த 20 குடியிறுப்புகள் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மூட்பதற்குள் 17 பேர் உயிரிழந்தனர்.
 
இதுவரை 50-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகும் நிலையில், கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும்,  காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :