புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (20:41 IST)

பா.ஜ.க.விற்கு விரைவில் புதிய தலைவர்: நாளை முக்கிய முடிவு ?

பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா, தற்போது அவர் உள்துறை அமைச்சராக உள்ளதால் அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த தேர்தலில் அமித்ஷா குஜராத் மாவட்டம் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

மேலும் அமித்ஷா தற்போது மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இதனை தொடர்ந்து அவரது பா.ஜ.க தலைவரின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் நாளை பா.ஜ.க.வின் புதிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில், தேர்தல் நடைபெற இருக்கிறது.

மேலும் பா.ஜக.வின் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கான புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகிறது.