புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (19:08 IST)

பாகிஸ்தான் வழியாக மோடி விமானம் பறக்காது: இந்திய வெளியுறவுத்துறை

பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு செல்லவிருக்கும்  நிலையில் தற்போது பாகிஸ்தான் வழியாக மோடி விமானம் பறக்காது என செய்தி வெளியாகியுள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, நாளை தொடங்கி  நாளை மறுநாள் வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டமைப்பில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகின.

மேலும் மோடி ஷாங்காய் மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வரவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க எதுவும் திட்டமில்லை என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி குடுக்கும் வகையில், பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய போர் விமானம் பாகிஸ்தனின் பயங்கரவாதிகளின் மீது குண்டு வீசியது.

இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டிற்கு மோடி விமானத்தை பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  அந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு அனுமதியும் வழங்கியது, ஆனால் தற்போது மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது என தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை, ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் மோடியின் விமானம் மத்திய ஆசிய நாடுகள் வழியாக கிர்கிஸ்தான் செல்லும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.