செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (10:48 IST)

ஊசலாடும் இணக்கம்: அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே காரணமாம்...

ஊசலாடும் இணக்கம்: அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே காரணமாம்...
அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என அதிமுகவில் பாஜகவுக்கு எதிரான குரல்கள் ஒளிக்க துவங்கியுள்ளன.
 
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து கலமிறங்கிய அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு அதிமுகவின் இரட்டை தலைமை காரணம் என கட்சிக்குள் சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்று அதிமுக ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இதை தவிர்த்து பாஜவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் அதிமுக தோல்வியை சந்தித்தது என்ற பேச்சும் அதிமுகவினரிடையே அதிகரித்துள்ளது. இது குறித்து சிவி சண்முகம் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில் இப்போது செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர். 
ஊசலாடும் இணக்கம்: அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே காரணமாம்...
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். தனித்து நின்றிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என பாஜகவுக்கு எதிராக அதிமுகவினர் வெளிப்படையாகவே பேச துவங்கியுள்ளனர். இதனால், பாஜக - அதிமுகவின் இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.