புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 ஜூன் 2019 (13:38 IST)

’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ :மோடியின் அடுத்த அதிரடி

”ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தேர்தல் முறையை குறித்து பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார்.

மோடி இதற்கு முன், இந்திய நாடு ஒரே நாடாக இருக்கவேண்டும் எனவும் வருங்காலத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனின் ஒரு பகுதியாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவேண்டும் என முடிவு செய்துள்ளார்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதால் பல நன்மைகளும் சில பிரச்சனைகளும் உள்ளன.

இதில் நன்மைகள் என்று எடுத்துகொண்டால், தேர்தலுக்காக செலவிடப்படும் பண இழப்பைத் தவிர்க்கலாம், அவ்வப்போது தேர்தல் பணியில் அரசு அதிகாரிகளை அமர்த்தும் நிலையை குறைத்து கொள்ளலாம்.

மேலும் பாதுகாப்பு படையினரை அடிக்கடி பணியில் அமர்த்தும் நிலையையும் குறைத்து கொள்ளலாம்.

இதில் பிரச்சனைகள் என்று பார்த்தோமானால், ஏற்கனவே பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள், மாநில சுயாட்சி வேண்டும் என்று கேட்டுகொண்டிருப்பதால் , ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்பது மாநில சுயாட்சியை பறிப்பதற்கான தொடக்கம் என எதிர்ப்பு கிளம்பலாம்.

எனினும், மத்திய மோடி அரசு இதனை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டுகிறார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.