திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (12:08 IST)

மகாராஷ்டிரா வாக்கெடுப்பு : ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி !

eknath shinde
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு மொத்தம் 144 வாக்குகள் தேவை என்ற நிலையில் 144 வாக்குகளையும் கடந்து அவருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது 
 
இதனை அடுத்து பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்டிரா சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது