ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (12:18 IST)

மகாராஷ்டிரா சபாநாயகர் ஆனார் பாஜக எம்.எல்.ஏ!

mahastra speaker
மகாராஷ்டிரா சபாநாயகர் ஆனார் பாஜக எம்.எல்.ஏ!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து  சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது என்பதை பார்ப்போம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் சிவசேனா கூட்டணியின் சார்பில் ராஜன் சால்வி மற்றும் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர்  ஆகிய இருவரும் போட்டியிட்டனர் 
 
இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 160க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று அதன் காரணமாக அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது