திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (16:41 IST)

பள்ளி மாணவர்களுக்கு மதியம் முட்டை பிரியாணி: அரசின் அதிரடி முடிவு..!

biriyani
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதியம் முட்டை பிரியாணி வழங்க முடிவு செய்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் காலை உணவு மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை போன்ற பெரிய நகரங்களில் உள்ள பள்ளி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுக இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்மெடுப்பில் தெரியவந்தது. 
 
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மேலும் வழங்குவதற்காக மதிய உணவுடன் முட்டை, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  அவித்த முட்டை அல்லது முட்டை பிரியாணி வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு வாழைப்பழமும், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran