செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (22:04 IST)

மோடி சுதந்திரமாக சுற்றுப்பயணம் செய்கிறார் - மாயாவதி குற்றச்சாட்டு

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே  இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன் டுவிட்டர் பக்கத்தில்,  பிரதமர் மோடி பலமுறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். ஆனால் அதற்குப் புகார் தெரிவித்தாலும் கூட அவர் சுதந்திரமாகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது :
 
பாஜக தலைமையும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். நேருவுக்குப் பின்னர் கூட இதே மாதிரியான கேள்வி இருந்தது. மக்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்வார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.