திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (08:30 IST)

பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவர் போபால் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்த பிரக்யா சிங் தாகூர், மும்பை தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறி சிக்கலில் சிக்கினார். இதற்கு பெரும் கண்டனங்கள் குவிந்ததால் வருத்தம் தெரிவித்தார்  பிரக்யா சிங் தாகூர்.
 
இந்த நிலையில் மீண்டும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பாபர் மசூதி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனையடுத்து தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் விதிகளை மீறும் வகையில் பாபர் மசூதி விவகாரம் குறித்து பேசியதாக அவர் மீது  தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்,  பிரக்யா சிங் தாகூர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.