வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (17:02 IST)

சக்கர நாற்காலி காலதாமதம் ஆனதால் முதியவர் உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம்!

சக்கர நாற்காலி காலதாமதமானதால் 80 வயது முதியவர் நடந்தே சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ரூபாய் 30 லட்சம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 
 
மும்பை விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கிய 80 வயது முதியவருக்கு சக்கர நாற்காலி கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த 80 வயது முதியவர் நடந்தே சென்ற நிலையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். 
 
இதுகுறித்து ஏஎர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கடந்த 12ஆம் தேதி மும்பை வந்த வயதான தம்பதியினர் இரண்டு சக்கர நாற்காலிகளை முன்கூட்டியே பதிவு செய்திருந்த போதும் அவர்களுக்கு ஒரே ஒரு நாற்காலி மட்டுமே வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது
 
Edited by Mahendran