வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:58 IST)

அம்மா இப்போது கட்சியில் வெறும் "லோகோ"வாக மட்டுமே -..- K.C. பழனிசாமி

கம்பீரத்தின் அடையாளமாக இருந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மா இப்போது கட்சியில் வெறும் "லோகோ"வாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார் என்று அதிமுக முன்னாள் எம்பி., கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார்.
 
அவர் மறைக்கு முன் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நிலையில், கட்சியையும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும், தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்.
 
அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி,  தினகரன் அணி  எனத் தனித்தனியாக பிரிந்து அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், கம்பீரத்தின் அடையாளமாக இருந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மா இப்போது கட்சியில் வெறும் "லோகோ"வாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார் என்று அதிமுக முன்னாள் எம்பி., கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
kc palanisamy
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
"அம்மா" என்ற ஒற்றை வார்த்தைக்கு அதிமுக -வினர் கொடுத்த மரியாதையும் அங்கீகாரமும் சொல்லி மாளாது. அந்த அளவு கம்பீரத்தின் அடையாளமாக இருந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மா இப்போது கட்சியில் வெறும் "லோகோ"வாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைந்தபட்சம் கட்சி சார்பாக கட்டுவதற்கு கூட யாரும் முன்வரவில்லை ஆனால் அவரது அரசியல் வாரிசாக பதவியை பெறுவதற்க்கு சசிகலா, தினகரன் , ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அவரது சகாக்கள் முயற்சிக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது ''என்று தெரிவித்துள்ளார்.