ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:32 IST)

பயண நேரத்த்ற்கு ஏற்ப விமான கட்டணம் உயர்வு!

கொரோனா தாக்கம் காரணமாக விமான கட்டணத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல், விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்ததும் விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விமான பயணத்தின் நேரம் அடிப்படையில் விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
1. 40 நிமிடத்துக்கு குறைவான பயணத்துக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.2,000 இருந்து ரூ.2,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.6,000 இருந்து ரூ.7,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
2. 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
3. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11, 700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
4. 90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13,000 உயர்த்தப்பட்டுள்ளது.
 
5. 120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,000, அதிகபட்ச கட்டணம் ரூ.16, 900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
 
6. 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
7. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7,200 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.24,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.