செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:19 IST)

விவசாயிகள் கணக்கில் 18000 ரூபாய் வரவு வைக்கப்படும்! அமித் ஷா உறுதி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 18000 வரவு வைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு பாஜக காலூன்ற கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. திருணாமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 18000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ‘பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகள் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானா்ஜி தனது ஈகோவினால் தடுத்துவிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அது நிறைவேற்றப்படும்’ எனக் கூறியுள்ளார்.