தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் ஊரடங்கு: உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து அனுப்பும் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் பேருந்து சேவை தொடங்கியது!
- ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் நடத்துங்கள்! – தலைமை காஜி அறிவிப்பு!
- தமிழகத்தில் கோயில்களை திறக்க அனுமதி.. ஆனால்..? – தமிழக அரசு நிபந்தனை!
- ஒன்றிரண்டு கொரோனா பாதிப்புகளுக்கு அலுவலகத்தை மூட வேண்டாம்! – மத்திய அரசு!
உள்நாட்டு விமான சேவை தொடங்கும் தேதி அறிவிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கின்போது பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் புதிய தளர்வாக மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவையை தொடங்க இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக வெளிநாட்டு விமான சேவையை விரிவுபடுத்த வைப்பதாகவும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி அவர்கள் தெரிவித்துள்ளார்
மே 25ஆம் தேதி விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான சேவையை தொடங்க இருப்பதால் பொதுமக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
