வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (19:55 IST)

திமுகவை பாகிஸ்தான் பாராட்டியது பெருமைக்குரியதா?

திமுகவின் போராட்டம் குறித்து பாகிஸ்தான் ஊடகம் ஒன்று பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த பாராட்டு பெருமைக்குரியதா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்திய அரசு எடுத்த ஒரு முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதே எதிர்ப்பை இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியும் செய்தால், அந்த கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாகத்தானே எண்ண தோன்றும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
காஷ்மீர் விஷயத்தில் காஷ்மீர் மாநில மக்களே எந்தவித போராட்டமும் செய்யவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்ட நிலையில் திமுக இந்த அளவுக்கு எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியே எழுகிறது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசுக்கு எதிராகவும் பாகிஸ்தான் ஆதரவு நிலையையும் எடுக்க வேண்டுமா? என்பதை ஆர்ப்பாட்டம் நடத்தும் திமுக யோசிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
உண்மையிலேயே திமுகவுக்கு காஷ்மீர் மக்கள் மீது அக்கறையிருந்தால் இந்த மசோதாவை எதிர்த்து வழக்குப்பதிவு செய்யலாம். சட்டப்படி இந்த பிரச்சனையை அணுகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.