புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:03 IST)

பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: ரவுண்டு கட்டி அடிக்கும் இந்தியா

காஷ்மீர் குறித்து போலியான தகவல்களை பரப்பிய 200 பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகளை முடக்கி இந்தியாவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறது ட்விட்டர்.

காஷ்மீர் சிறப்பு பிரிவு அந்தஸ்துக்கு பிறகு பாகிஸ்தான் – இந்தியா இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இதுகுறித்து ஐ.நாவில் மேல்முறையீடு கோரியது. ஆனால் அவர்கள் இது இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறி பாகிஸ்தானை திரும்ப அனுப்பி விட்டார்கள்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறுவதாக கூறி எங்கெங்கோ எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு பாகிஸ்தானியர்கள் பலர் போலியான செய்திகளை பரப்பி வந்திருக்கின்றனர். பயங்கரவாதத்தை தூண்டும்படி போலியான தகவல்களை பரப்பியதற்காக பாகிஸ்தானியர்களின் 200 ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உரிய விளக்கம் கோரி ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை கேள்வியெழுப்பியுள்ளது பாகிஸ்தான். இதுகுறித்து அந்நிறுவனங்களுக்கே புகார்களையும் அனுப்பியுள்ளனர் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறையினர். இந்த சம்பவத்தால் சோசியல் மீடியாக்களும் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனவா என்ற சந்ந்தேகம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய யூட்யூப் சேனல்களை அன்சப்ஸ்க்ரைப் செய்தனர் பாகிஸ்தானியர்கள். அதுபோல சமூக வலைதளங்கள் ஒருவேளை இந்தியாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டால் அதையும் அன் இன்ஸ்டால் செய்து விடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.