வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2025 (14:37 IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த திமுக அரசு மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரம், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் எதிரொலித்தது.
 
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா உள்ளிட்டோர், அவையின் அன்றாட நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவரும் துணை சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும், அவையின் மற்ற அலுவல்களை நிறுத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது என்று கூறி, திமுக எம்.பி.க்களின் கோரிக்கையை சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்தார்.
 
மாநிலங்களவை தலைவரால் விவாத கோரிக்கை ஏற்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி இந்து அமைப்புகள் குரல் கொடுத்துவரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய அளவில் விவாதிக்க திமுக நாடாளுமன்றத்தில் முயற்சி மேற்கொண்டது. ஆனால், நாடாளுமன்ற நடைமுறைகள் காரணமாக அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
 
Edited by Mahendran