காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட தயார்: மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட தயார் என மேற்கு வங்க மாநில முதல்வர் மந்த பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி நடைபயணம் செய்ததை அடுத்து கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என தற்போது புதிதாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களில் அவர்களை ஆதரித்து ஒப்பந்தம் போட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் எந்த மாநிலத்தில் வலுவாக இருக்கிறதோ அங்கு மற்ற அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியும் சில தியாகங்களை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva