ஓட்டுரை தாக்கிய போலீஸார் பணியிடை நீக்கம்

Police
Sinoj| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (23:25 IST)

மத்திய பிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாத ஓட்டுநரை தாக்கிய இரு போலீஸார்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் பிரோஸ் காந்தி நகர் பகுதியில் இன்று
தனது தந்தையைப் பார்ப்பதற்காக கிருஷ்ண கேயர் என்ற ஆட்டோ ஓட்டுநர் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த முககவசம் மூக்குக்கு கீழே இருந்ததைப் பார்த்த போலீஸார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகைப்படம் வைரலாகவே இரு போலீஸார்கள் பணீயிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :