திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (23:22 IST)

நான் ஒரு மண் மாதிரி...தனுஷ் பட நடிகை ஓபன் டாக்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷிக்கு ஜோடியாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலைய்ல்,.  இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறீயுள்ளதாவது:  நான் நடித்த ஜூன் படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு கர்ணன் படத்தில் நடிக்க அழைத்தாக மாரி செல்வராஜ் கூறினார். இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் முக்கியத்துமானது.  இதற்கேற்றபடி உடல்வாகுடன் பொருத்தமான  உடையுடன் நடித்துள்ளேன். அதில் நான் ஒரு மண் மாதிரி…முக்கியமான இப்படத்தில் மேக் அப் இல்லை..இப்படம் தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊர் சென்று தங்கிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.