இந்த நிதியாண்டுக்குள் 27 வந்தே பாரத் ரயில்: மத்திய அரசு திட்டம்!
இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது
நாடு முழுவதும் அதிக வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும், படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
வந்தே பாரத் ரயில்கள் முழுவதும் குளிரூட்டப்பட்டது என்பதும் பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏழை எளிய மக்கள் செல்ல முடியாத வகையில் இதில் ரயில் கட்டணம் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது
Edited by Mahendran