திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:19 IST)

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர் திடீர் உயிரிழப்பு!

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 15ஆம் தேதி முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இதனை அடுத்து ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  75 வயதான அந்த முதியவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய ஒரு சில நிமிடங்களில் திடீரென மரணமடைந்தார் 
 
இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய முதியவர் மரணம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட இருப்பதாக ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது