1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2023 (12:15 IST)

பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்: இன்ஸ்டாகிராமில் தோனி..!

பாரதியனாக இருப்பதில் பாக்கியமாக கருதுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தோனி தனது இன்ஸ்டாகிராம் டிபி-ஐ மாற்றி இருந்தார் என்பதும் அதன் பிறகு தற்போது திடீரென மீண்டும் பாரத் குறித்த டிபி-ஐ வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த டிபியில் பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகம் உள்ளது. தற்போது பாரத் என்ற என்பது பேசுபொருளாகியுள்ள நிலையில் பாரதியன் என்ற வாசகத்தை தோனி தனது டிபியில் வைத்திருப்பது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், பாரத் என்ற பெயர் மாற்றம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது தோனியும் ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva