சபரிமலையில் 3 முறை தெரிந்த மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்!

சபரிமலையில் 3 முறை தெரிந்த மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்!
siva| Last Updated: வியாழன், 14 ஜனவரி 2021 (19:04 IST)
சபரிமலையில் 3 முறை தெரிந்த மகரஜோதி: ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று சபரிமலையில் மகரஜோதி தெரிவதும் அதனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவது வழக்கமான ஒன்றே
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே மகரஜோதி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும் இணையதளங்கள் மூலம் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என ஏற்கனவே சபரிமலை தேவஸ்தானம் கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதன்படி இந்த ஆண்டு மகரஜோதி பார்ப்பதற்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது
இந்த மகரஜோதி மூன்று முறை காட்சி தந்தது என்றும் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை காட்சி தந்த இந்த மகரஜோதியை பக்தர்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையை அதிரவைக்கும் சரணம் என்ற கோஷம் மகரஜோதி தெரிந்தபோது இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :