இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சிம்பு: வைரலாகும் புகைப்படங்கள்!
இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சிம்பு:
நடிகர் சிம்பு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதும் ஒவ்வொரு வருடமும் அவர் கடந்த சில வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு என்ற படத்தின் படப்பிடிப்பில் சிம்பு இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்ட சிம்பு அந்த பிரேக்கில் சபரிமலைக்கு செல்ல முடிவெடுத்தார். சமீபத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்த நிலையில் தற்போது இருமுடி கட்டி அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
சிம்புவின் ஆன்மீக சேவை தொடர வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருவதை அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன