திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:57 IST)

புதின் ரகசிய காதலிக்கு பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி

putin
ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு பொருளாதார தடைகளை அமெரிக்க அரசு விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன
 
அதுமட்டுமின்றி ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி அலினா கபெவா என்பவர் அமெரிக்காவில் உள்ளார். இவருக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய பாஸ்போர்ட்டையும் அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது