வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 மே 2024 (17:16 IST)

எங்கிருந்தாலும் உடனே நாடு திரும்ப வேண்டும்.. பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

deva
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகியுள்ள பிரஜ்வால்  ரேவண்ணாவுக்கு,  அவருடைய தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அந்த எச்சரிக்கையில் அவர் கூறியபோது, ‘சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமென்றும் பேரனுக்கு தேவகவுடா அறிவுறுத்தல் அறிவுறுத்தியுள்ளார்.
 
தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, பிரஜ்வால் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் எனவும் தேவகவுடா காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார்கள், எல்லாம் என் கவனத்திற்கு வந்தது என கூறிய தேவகவுடா, பொறுமைக்கும் எல்லை உண்டு என பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran