தொடர்புடைய செய்திகள்
- சவுக்கு சங்கர் கைது.. பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு: சசிகலா கண்டனம்..!
- பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் ஒரு வருடமாக வேடிக்கை பார்த்தது கர்நாடக அரசு தான்: நிர்மலா சீதாராமன்
- தனக்குத்தானே பிரசவம்.. குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் கைது
- மேற்குவங்க ஆளுநர் மீது பணிப்பெண் பாலியல் புகார்..! 4 பேருக்கு சம்மன்..!
- உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி.! ஆபாச வீடியோவை வெளியிட்ட கள்ளக்காதலன்..!
ஜெர்மனியே செல்லவில்லை.. தேவகவுடா வீட்டில் பதுங்கியிருந்த ரேவண்ணா கைது..!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணாவை கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். தேவகவுடா வீட்டில் பதுங்கியிருந்த ரேவண்ணாவை நேற்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் 3000 அதிகமான ஆபாச வீடியோக்கள் எடுத்து தனது மொபைல் போனில் வைத்ததாகவும் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றம் சாட்டிய நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரை பிடிக்க தனிப்படையினர் ஜெர்மனி செல்லவும் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் தான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவரது வீடு நோட்டமிடப்பட்டது என்பதும் அதில் பிரஜ்வல் ரேவண்ணா அவரது வீட்டிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
