1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (15:35 IST)

2020 முதல் ரூ.2000 செல்லாது? வங்கி தரப்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜனவரி 1, 2010 முதல் ரூ.2000 நோட்டு செல்லாது என வெளியாகி வரும் தகவல்களுக்கு வங்கி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 
ரிசர்வ் வங்கி ஜனவரி 1 ரூ.1000 நோட்டுகளை வெளியிட உள்ளது. இதனால் ரூ.2000 செல்லாது, அது விரைவில் திரும்பி பெறப்படும், எனவேதான் எடிஎம் இயந்திரங்களில் கூட ரூ.2000 நோட்டு வைக்கப்படுவதில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் இந்த தகவலுக்கு வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரூ. 1000 வெளியீடு, ரூ.2000 செல்லாது என ரிசர்வ் வங்கியோ, அரசோ தெரிவிக்கவில்லை. புதிய ரூ.1000 நோட்டின் புகைப்படமும் பொய்யானது. 
 
ரிசர்வ் வங்கி, மத்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் செய்திகளை மட்டும் நம்புங்கள். சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள செய்திகள் பொய்யானவை, வெறும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.