திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (13:00 IST)

டிரஸ்ஸிங் ரூமில் தோனி என்ன சொன்னார் தெரியுமா? நதீம் பேட்டி!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்யை காண மைதானத்திற்கு வந்திருந்த தோனி பந்துவீச்சாளர் நதீமுடன் என்ன ஏசினார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியை காண தோனி மைதானத்திற்கு வந்திருந்தார். அதன் பின்னர் அவர் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்று பேசிக்கொண்டிருந்த புகைப்படங்களும் இணையத்தி வெளியாகின. 
 
இந்நிலையில், தோனி டெஸ்ட் போட்டியில்  அறிமுக வீரராக களமிறக்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர் நதீமுடன் என்ன பேசிக்கொண்டுந்தார் என அவரே தகவல் வெளியிட்டுள்ளார். நதீம் இது குறித்து விவரித்ததாவது, 
 
போட்டிக்கு பின்னர் தோனியை சந்தித்து எனது ஆட்டம் எப்படி இருக்கிறது என கேட்டேன். அதற்கு அவர், உனது பந்துவீச்சை பார்க்கிறேன். இப்போது பந்துவீச்சில் முதிர்ச்சி தெரிகிறது. அதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடியதுதான் காரணம். உனது பயணம் துவங்கிவிட்டது. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.