டான் தாவூத்துக்கும் ஷில்பா ஷெட்டிக்கும் ரூ.100 கோடி லிங்க் என்ன?

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 24 அக்டோபர் 2019 (10:27 IST)
தாவூத் இப்ராகிமின் நிறுவனத்திடம் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி வட்டியில்லா கடன் பெற்றுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சிக்கியுள்ள ஆர்கே டபிள்யு முன்னாள் இயக்குனர் ரஞ்சித் பிந்த்ரா மற்றும் மற்றொரு இயக்குனரான பாபா தேவன் என்ற தீரஜ் வாத்வான் ஆகியோருடன் ஷில்பா ஷெட்டி  இயக்குனராக இருந்த எஷன்சியல் ஹாஸ்பிடாலிட்டி (essential hospitality) என்ற நிறுவனம் தொடர்பில் இருந்துள்ளது. 
 
அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தீரஜ் , டான் தாவூத் இப்ராகிமின் நிறுவனத்திடம் இருந்து பாலிவுட் நடிகை ஷில்ப ஷெட்டியும் அவரது கனவர் ராஜ் குந்தராவும் சேர்ந்து ரூ.100 கோடி வட்டியில்லா கடன் வாங்கியுள்ளதாக கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  
 
ஆனால், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா 2011 ஆம் ஆண்டு விமான நிலையம் அருகில் இருந்த ஒரு சொத்தை ஆர்கே டபிள்யு நிறுவனத்திற்கு விற்றோம். ஆனால், அந்த நிறுவனம் தாவூத்துடன் தொடர்புடைய நிறுவனமா என்பது தெரியாது என்றும் நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்றும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :