’உலக அதிசயம் ‘’தாஜ்மஹாலை மூட டெல்லி மாநில உத்தரவு....
டெல்லி அரசு வரும் மே 15 ஆம் தேதிவரை தாஜ்மஹாலை மூட்ட டெல்லி மாநில உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படு வருகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தை அடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகளவு கொரொனா தொற்றுப் பரவிவருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அம்மாநிலத்தில் 22,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மே 15 ஆம் தேதிவரை பள்ளிகள் மூடப்படுவதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், அம்மாநிலத்தில் இரவு 7 மணியிலிருந்து காலை 8 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அத்துடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டாமல் அவர்களுக்கு ரூ.1000 அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி அரசு வரும் மே 15 ஆம் தேதிவரை தாஜ்மஹாலை மூட்ட டெல்லி மாநில உத்தரவிட்டுள்ளது. மேலும்,தாஜ்மஹாலுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவாமல் தடுக்க இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.