வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (13:31 IST)

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க கட்டணம் உயர்வு! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

ஆக்ராவில் உள்ள புராதான சின்னமான தாஜ்மஹாலை சுற்றிபார்க்க வரும் பயணிகளுக்கு பார்வை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காதல் சின்னமாக போற்றப்படும் இந்திய புராதான சின்னமான தாஜ்மஹாலை சுற்றிபார்க்க உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாவுக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டினருக்கு 1100 ரூபாயும், உள்நாட்டினருக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உள்நாட்டு பயணிகளுக்கு 80 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 1200 ரூபாயும் நுழைவு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தாஜ்மஹாலின் பிரதான வாயிலுக்கு செல்ல முன்னர் 200 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.