வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (11:38 IST)

ஓட்டு போடாவிட்டால் ரூ.350 அபராதமா?

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக எடுக்கப்படும் என தகவல் கசிந்து வருகிறது. 

 
டெல்லியில் ஓட்டு போடாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து ரூ.350-ஐ தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. இது வைரலானதால் தற்போது இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 
 
ஓட்டு போடாவிட்டால் அபராத தொகை வங்கி கணக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படும் எனும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த போலி தகவலை பரப்பிவிட்டவர்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.