செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (11:46 IST)

டெல்லி வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி! – மொத்த பாதிப்பு 5 ஆக உயர்வு!

இந்தியாவில் ஏற்கனவே 4 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் தற்போது டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் ஒமிக்ரான் சோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தென்னாப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து டெல்லி வந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர்க்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.