செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:58 IST)

பள்ளிகளை மூட நாங்கள் சொல்லவே இல்லை: டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம்

பள்ளிகளை மூடுங்கள் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்றும் பள்ளிகளை திறந்து வைத்ததன் காரணம் என்ன என்று மட்டுமே நாங்கள் விளக்கம் கேட்டதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி அரசுக்கு தெரிவித்துள்ளனர்
 
டெல்லியில் மாசு குறைபாடு காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியவர்களான அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது குழந்தைகளான மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரச் சொன்ன காரணம் என்ன என்று தான் நாங்கள் கேட்டோம் என்றும் பள்ளிகளை உடனடியாக மூடும்படி நீதிமன்றம் நெருக்குதல் கொடுத்ததாக கூறப்பட்டிருப்பது தவறான தகவலாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த வழக்கில் சில ஊடகங்கள் தங்களை வில்லன்களாக சித்தரித்து விட்டதாகவும் நீதிபதிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது