செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:54 IST)

டெல்லியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது என்று ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் டெல்லியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்திலும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லியை அடுத்து தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது