டெல்லியில் அதிமுக ஆஃபிஸ்: வேலைகளை மும்முரமாக முடுக்கிவிட்ட ஈபிஎஸ்!
டெல்லியில் அதிமுக அலுவலகம் கட்டப்படும் பணிகளை வேகமாக முடிக்கும்படி கேட்டுள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது அதிமுக. அதோடு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.
இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா டெல்லியில் தமிழகர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியான புஷ்ப விஷார் பகுதியில் அதிமுக அலுவலகம் ஒன்றை கட்ட வேண்டும் என விரும்பி அதற்கான பணிகளையும் முன்னெடுத்தார்.
இதற்காக மத்திய அரசும் 25 செண்ட் நிலத்தை 99 வருட குத்தகைக்கு அதிமுகவிடம் வழங்கியது. ஆனால், இந்த கட்டிட பணிகள் நடைப்பெற்று வரும் போதே ஜெயலலிதா மறைந்துவிட்டார். எனினும் இதை மறவாத ஈபிஎஸ் அந்த கட்ட பணி குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டாராம்.
மேலும் வரும் பிப்ரவரிக்குள் கட்டுமான பணிகளை முடிக்கும் படி கேட்டுள்ளாராம். அதாவது பிப்ரவரி 24-ல் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அதிமுக அலுவலகத்தை திறக்க திட்டமிட்டு வருகிறாராம்.