திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (12:11 IST)

கேன்சல் செய்தால் ஓலா, ஊபர் டிரைவர்களுக்கு அபராதம்! – போக்குவரத்து காவல்துறை!

வாடிக்கையாளர் புக் செய்யும் போது ஏற்றுக் கொண்டு வராமல் கேன்சல் செய்யும் டிரைவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது ஐதரபாத் போக்குவரத்து காவல்.

இந்தியா முழுவதும் ஓலா, ஊபர் போன்ற வாடகை டாக்ஸி அப்ளிகேசன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் டாக்ஸி புக் செய்யும் போது அதை ஏற்றுக் கொண்ட டிரைவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தால் அந்த அழைப்பை மறுத்து விடுகிறார்கள் அல்லது செல்லாமல் இருந்து விடுகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்த புகார்கள் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு அதிகமாக வந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போக்குவரத்து காவல்துறை ‘எந்த டிரைவராவது அழைப்பை ஏற்றுக்கொண்டு வருவதாக கூறிவிட்டு வராமல் போனாலோ, தூரத்தை காரணம் காட்டி மறுத்தாலோ, கூடுதல் தொகை கேட்டாலோ” புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஐதராபாத் காவல்துறை வாட்ஸப் எண் ஒன்றையும் அளித்துள்ளது. இது தொடர்பான புகார்களை அதன்மூலம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதன்படி ஒப்புக்கொண்ட பிறகு வர மறுக்கும் டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.