திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நாளை முதல் பார்களுக்கு அனுமதி: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த வாரம் முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பார்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது ஆனால் தமிழகத்தில் இன்னும் பார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் நாளை முதல் பார்களுக்கு அனுமதி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் 50 சதவீத பேர் அமரும் வகையில் மதுபான பார்களை திறக்க அரசு சற்று முன் அனுமதி அளித்துள்ளது
 
அதேபோல் டெல்லியில் நாளை முதல் பூங்காக்கள், கோல்ப் கிளப், வெளிப்புற யோகா மையங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை அடுத்து மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக பார்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்திலும் விரைவில் பார்கள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது