1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (13:07 IST)

பெட்ரோல் விலையை ரூ.8 வரை குறைத்த டெல்லி அரசு!!

பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து டெல்லி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலையை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
இந்த வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து உள்ளன என்பதும் அந்த மாநிலங்களில் பெட்ரோலின் விலை குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக வாட் வரி குறைப்பால் டெல்லியில் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது. தற்போது டெல்லியில் பெட்ரோல் ரூ.103.97 ஆகவும் டீசல் ரூ.86.67 ஆகவும் உள்ளது.