அனுமன் ஜெயந்தி அன்று கலவரம்: புல்டோசர் மூலம் பதிலடி கொடுக்கும் டெல்லி அரசு
அனுமன் ஜெயந்தி அன்று கலவரம்: புல்டோசர் மூலம் பதிலடி கொடுக்கும் டெல்லி அரசு
டெல்லியில் அனுமன் ஜெயந்தி அன்று கலவரம் நடந்த பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்கும் பணியில் புல்டோசர் மூலம் இடிக்கும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியின் வடக்குப்பகுதியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி நடந்த போது ஒரு சிலர் கல்லால் எறிந்து அந்த ஊர்வலத்தை பதற்றமாக்கினர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை புல்டோசர் மூலம் டெல்லி அரசு இடித்து தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் உத்தரவு கையில் கிடைக்கும் வரை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது