தீவிரமடையும் போலீசார் போராட்டம்: நாடு முழுவதும் பரவியதால் பரபரப்பு

Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (21:57 IST)
டெல்லியில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக நேற்று வழக்கறிஞரகள் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று காலை திடீரென போலீசார் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக போலீசார் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது மத்திய மற்றும் மாநில அரசை நிலைகுலைய செய்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போய்விட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக போலீசார்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களது குடும்ப உறுப்பினர்களும் களத்தில் குதித்தனர். போலீசார்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போலீசார்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அவர்கள் எப்படி மக்களை பாதுகாக்க முடியும்? போன்ற பதாதைகளை கையிலேந்தி போலீசாரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்று டெல்லியில் முக்கிய பகுதியில் ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அது மட்டுமின்றி போலீசார்களின் இந்த போராட்டத்திற்கு ஐபிஎல் சங்கம் வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்தது. இதனை அடுத்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள போலீசார் மறைமுகமாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு அளிப்பதோடு போராட்டத்தில் இறங்கவும்ம் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

மொத்தத்தில் டெல்லியில் நடைபெற்று வரும் போலீசாரின் போராட்டம் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால், உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :