1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. deepavali special train from tenkasi to varanasi

தீபாவளி பண்டிகையை ஒட்டி தென்காசி - வாரணாசி இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Train
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி முதல் வாரணாசி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரியையொட்டி தென்காசியில் இருந்து வாரணாசிக்கு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளது. 
 
இந்த ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி மதியம் 3.50 மணிக்கு புறப்படும்.  இந்த ரயில் நவம்பர் 11ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு வாரணாசி சென்றடையும். 
அதேபோல் மறு மார்க்கமாக நவம்பர் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு 17ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு தென்காசி அடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அப்படியே அதே ஃபோன்தான்.. இந்த ஒரு சிறப்பம்சம் மட்டும் கூடுதல்! – Redmi 12 5G எப்படி இருக்கு?