மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு கடந்த 2020 - 21ஆம் தேதி ஆண்டில் ஒரு 1,36,988 கோடி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது என்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
மேலும் 2022-23ஆம் நிதி ஆண்டில் அதன் எண்ணிக்கை அதிகரித்து ரூ.1,49,168 என வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு தரவில்லை என ஒரு சில மாநிலங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பதிலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran