வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:34 IST)

ஹரியானாவில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து... 6 பேர் பலி!

ஹரியானா மாநிலத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் தம்பதி மற்றும் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் தாலுகா முகாமில் உள்ள ஒரு வீட்டில் இன்று  காலையில் சமையல் செய்யும்போது,. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்,  மேற்குவங்கத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வந்த தம்பதியர் மற்றும் 4 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர்  விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கப்பட்டன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.