தீவிர புயலாக மாறியது 'பெய்ட்டி: நாளை கரையை கடக்கும் என தகவல்
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி இன்று புயலாக உருவாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி தீவிரப் புயலாக மாறிவிட்டதாகவும் இந்த புயல் 26 கி.மீ வேகத்தில் நகரும் என்றும், நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்றும் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளதால் நாளை பிற்பகலுக்கு பின் புயல் கடக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.