செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:46 IST)

ஆரஞ்சு அலார்ட் : ஆந்திரா, புதுவையை தூக்கி வீச காத்திருக்கும் பெய்ட்டி புயல்

வங்ககக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. "பெய்ட்டி" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் போது வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


 
கஜா புயல் தமிழகத்தை புரட்டிப் போட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது நேற்று இரவு புயலாக வலுவடைந்தது.
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பெய்ட்டி புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமை மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் மீனவர்கள் தெற்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய தெற்கு வங்ககக்கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் வரும் முன்னரே சென்னை உள்ளிட்ட இடங்களில் தரைக்காற்றின் வேகம் மணிக்கு 20 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
 
இந்த புயலானது ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- காக்கிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆதலால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு முடுக்கிவிட்டுள்ளது.  மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டினம், கோதாவரி கிழக்கு, மேற்கு மற்றும் குண்டூர் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.